1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty

பட்ஜெட்டுக்கு பின் தொடர் வீழ்ச்சியில் பங்குச்சந்தை.. இன்றும் 500 புள்ளிகள் சரிவு..!

பங்குச்சந்தை
பட்ஜெட் தினத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்த நிலையில் அதன் பின்னர் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பங்குச்சந்தை சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவில் உள்ளது என்பதும் குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 830 புள்ளிகள் சரிந்து 57 ஆயிரத்து 960 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 210 புள்ளிகள் குறைந்து 22,952 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் எச்டிஎப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட ஒரு சில பங்குகளை தவிர மற்ற அனைத்து பங்குகளும் சரிவில் உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.4000 குறைந்த தங்கம்.. ரூ.50,000க்கு கீழ் வருமா?