1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஜூலை 2024 (09:53 IST)

மைக்ரோசாப்ட் பிரச்சினையால் இந்திய பங்கு சந்தைகளுக்கு பாதிப்பா? செபி விளக்கம்..!

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சனை இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் இந்திய பங்குச் சந்தையிலும் அதன் பாதிப்பு ஏற்பட்டதா என்ற கேள்விக்கு செபி விளக்கம் அளித்துள்ளது.

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சனையால் சர்வதேச வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் லண்டன் பங்கு சந்தைகள் முடங்கியதாகவும், ஆஸ்திரேலியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தை பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்திய தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச்சந்தை ஆகியவை எந்தவித பாதிப்பும் இன்றி செயல்பட்டதாக செபி விளக்கம் அளித்துள்ளது. மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சனையால் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டாலும் இந்திய பங்குச் சந்தையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஒரு சிலருக்கு மட்டுமே சிறிய அளவில் பாதிப்பை ஏற்பட்டதாகவும் அந்த பாதிப்பும் உடனடியாக தீர்வு காணப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பங்கு சந்தைகளை ஒப்பிடும்போது இந்திய பங்குச் சந்தைகளில் தகவல் தொழில்நுட்பதற்கான கட்டமைப்புக்கு மிகவும் குறைவான தொகை செலவிடப்படுகிறது இருப்பினும் இந்திய பங்குச்சந்தையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பு செபியின் தகவல்படி தொழில்நுட்ப கட்டமைப்புக்காக 93 கோடி மட்டுமே செலவு செய்கிறது. ஆனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பங்குச் சந்தைகள் இதைவிட பல மடங்கு தொழில்நுட்ப கட்டமைப்புக்காக செலவு செய்வது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva