1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (11:48 IST)

வழக்கத்திற்கு மாறாக பட்ஜெட் தினத்தில் சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பொதுவாக பட்ஜெட் தினத்தில் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயரும் என்பது தான் கடந்த கால வரலாறாக இருக்கும் நிலையில் இன்றைய பட்ஜெட் தினத்தில் பங்குச்சந்தை சரிந்து இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால் வழக்கத்திற்கு மாறாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 37 புள்ளிகள் சார்ந்து 80417 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 23 புள்ளிகள் சரிந்து 24, 486 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
பட்ஜெட் தினத்தில் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயரும் என்று லாபத்தை எதிர்நோக்கி காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை சரிந்து உள்ளது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் லீவர், இன்போசிஸ், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva