1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

Gold
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று தங்கம் விலை திடீரென 600 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது, அதாவது ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய்   7,275 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய்  58,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7780 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,240 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மீண்டும் ஒரு ரயில் விபத்து: எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் அதிர்ச்சி..!