அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு.. தமிழக பகுதியில் கரை கடக்குமா?
தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோரப் பகுதிக்கு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தமிழக மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று அதாவது நவம்பர் 9ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், எனவே இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Mahendran