தொடர்புடைய செய்திகள்
- 10 நாட்களாக தொடர் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை.. இன்று சற்று குறைந்ததால் நிம்மதி..!
- இப்படி ஒரு காமன்வெல்த் போட்டி தேவையா? ப சிதம்பரம் ஆதங்கம்..!
- ஸ்டார் படத்தில் நான் சொன்ன மாற்றங்களை இயக்குனர் ஏற்கவில்லை… கவின் ஆதங்கம்!
- தங்கம் விலை தொடர் ஏற்றம்.. ஒரு சவரன் ரூ.59000 என நெருங்கியதால் அதிர்ச்சி..!
- இன்று தங்கம் விலை ஏற்றமா? சரிவா? சென்னை தங்கம் வெள்ளி நிலவரம்..!
நேற்று ஒருநாள் மட்டுமே சரிவு.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் நேற்று ஒரு நாள் மற்றும் தங்கம் விலை சரிந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனி தொடர்ந்து விலை சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் .இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,295 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 58,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,750 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
