வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 23 அக்டோபர் 2024 (14:28 IST)

ஸ்டார் படத்தில் நான் சொன்ன மாற்றங்களை இயக்குனர் ஏற்கவில்லை… கவின் ஆதங்கம்!

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தின் ரிலீஸூக்கு முன்னால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மோசமான விமர்சனம் காரணமாக அதன் பிறகு வசூல் சுத்தமாகக் குறைந்துவிட்டது. அந்த நேரத்தில் ரிலீஸ் ஆன அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இந்த படத்தால் தாக்குப் பிடிக்கவில்லை.  அதனால் அடுத்த லெவலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு இது ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ஹரிஷ் கல்யாண்தான். அவரை வைத்து போட்டோஷூட் எல்லாம் எடுக்கப்பட்டு போஸ்டர்கள் ரிலீஸாகி இருந்தன. அந்த போஸ்டர்களில் அவர் ரஜினி கமல் விஜய் அஜித் கெட்டப்களில் காணப்பட்டார். இடையில் கொரோனா தொற்றுப் பரவலால் அந்த திரைப்படம் தாமதம் ஆனது.

இந்நிலையில் ஸ்டார் படத்துக்கு வந்த கலவையான விமர்சனங்கள் பற்றி தற்போது கவின் பேசியுள்ளார். அதில் “நான் ஸ்டார் படத்தின் கதையைக் கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அது படமாக வந்தபோது இரண்டாம் பாதியில் நிறைய தேவையற்றக் காட்சிகள் இருந்தன. அந்த காட்சிகளால் நன்றாக் இருக்கும் காட்சிகளைக் கூட ரசிக்க முடியாமல் போய்விடலாம். அதனால் 20 நிமிடக் காட்சிகளை நீக்கலாம் என்றேன். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை. அதனால் நானும் அதன் பிறகு அழுத்தம் கொடுக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.