திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 24 அக்டோபர் 2024 (11:15 IST)

10 நாட்களாக தொடர் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை.. இன்று சற்று குறைந்ததால் நிம்மதி..!

Gold
கடந்த 10 நாட்களாக தங்கம் விலை தொடர் ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அக்டோபர் 15ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 7095 என்று விற்பனையான நிலையில் படிப்படியாக தங்கத்தின் விலை அதிகரித்து நேற்று 7340 என விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து   விற்பனை ஆகி வருவது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ரூபாய்   7,285 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 440 குறைந்து ரூபாய்  58,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,740 எனவும் ஒரு சவரன் ரூபாய் 61,920 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 110.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  110,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva