தொடர்புடைய செய்திகள்
- யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை தோனி அழித்து விட்டார்… யோகராஜ் சிங் ஆதங்கம்!
- பாலியல் வன்கொடுமை செய்தால் ஆணுறுப்பை அறுக்க வேண்டும்! - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்!
- இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
- இந்த மாதம் வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! - மக்கள் அதிர்ச்சி!
- சென்னை வீராணம் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னை மாநகருக்கு குடிநீர் செல்வதில் சிக்கல்...
இன்று ஒரே நாளில் 200 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளதை அடுத்து நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 6,670 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 குறைந்து ரூபாய் 53,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,125 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 91.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 91,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
