ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 (08:46 IST)

இந்த மாதம் வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! - மக்கள் அதிர்ச்சி!

மாதம்தோறும் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வணிகத்தின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து கேஸ் சிலிண்டர் நிறுவனங்கள் மாதம்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகின்றன. முன்னதாக மாதம் ஒருமுறை கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மாதம் இருமுறை விலை மாற்றம் செய்யப்படுகிறது.

 

அதன்படி இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 19 கிலோ வணிக கேஸ் சிலிண்டர் ரூ.38 விலை உயர்ந்து ரூ.1855 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விலை மெல்ல உயர்ந்து 2 ஆயிரம் ரூபாயை நெருங்கிக் கொண்டிருப்பது ஹோட்டல் உரிமையாளர்கள், சிற்றுண்டி கடை வைத்திருக்கும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.

 

ஆனால் அதே சமயம் வீட்டு பயன்பாட்டிற்கான 14 கிலோ எடைக் கொண்ட வீட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50 என்ற விலையில் தொடர்ந்து நீடித்து வருவது இல்லத்தரசிகளை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K