தொடர்புடைய செய்திகள்
- இ-சிகரெட் பதுக்கி வைத்து விற்பனை.. சென்னையில் இருவர் கைது..!
- காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை அறிவிப்பு..!
- வினேஷ் போகத்துக்கு தங்கப்பதக்கம் கொடுத்த சொந்த கிராமத்தினர்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!
- நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- சென்னை ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு..!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.. உயர்ந்ததா? குறைந்ததா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஏற்ற இறக்கமின்றி நேற்று முன்தின விலையில் தான் விற்பனையாகி வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளன.
எனவே சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களில் தங்கத்தின் விலை ஏற்றமும் இல்லை இறக்கமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூபாய் 6,670 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ரூபாய் 53,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,125 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 91.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 91,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
