வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (14:19 IST)

சென்னை ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

south railway
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து சீரானது என தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பணி  நிறைவடைந்து மின்சார ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது என அறிவிக்கப்பட்டுள்ளது,
 
குறிப்பாக செங்கல்பட்டு - தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கியது என்றும், தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல நின்று செல்லும் என்றும், அனைத்து ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது என்றும் தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
நாளை முதல் சீராகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்ததால் இன்றே ரயில் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva