தொடர்புடைய செய்திகள்
- நாங்களும் மனுஷங்கதான்… விமர்சனங்கள் வந்தால் பரவாயில்லை – பிரியா பவானி சங்கர் ஆதங்கம்!
- இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரம்.. வெள்ளி வென்று அசத்தல்..!
- 34 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் இழப்பு.. 51 வயது சென்னை நபர் தற்கொலை!
- இறங்கிய வேகத்தில் மீண்டும் உயரும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
ஒரே நாளில் 600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 600 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைப்பு அறிவிப்பு வெளியான பின்னர் தங்கம் விலை தலைகீழாக சரிந்த நிலையில் மீண்டும் படிப்படியாக தங்கம் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியும் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,425 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 600 உயர்ந்து ரூபாய் 51,400 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,880 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,040 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 88.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 88,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
