வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (10:08 IST)

மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை.. விட்டதை பிடித்துவிட்ட முதலீட்டாளர்கள்..!

பங்குச்சந்தை கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 2200 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் பங்கு சந்தை உயர்ந்து வருவதை அடுத்து முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்தனர். 
 
இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து உள்ள நிலையில் கிட்டத்தட்ட விட்டதை முதலீட்டாளர்கள்  பிடித்து விட்டதாக கருதப்படுகிறது. 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் சென்செக்ஸ் 815 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 700 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 240 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 360 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இன்னும் சில நாட்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்தை கேட்டு முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.  இன்று மிக சில பங்குகள் மட்டும் தான் குறைந்துள்ளது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும் உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva