1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

4 நாள் சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம்.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

சென்னை
தங்கம் மற்றும் வெள்ளி விலை பட்ஜெட்டுக்கு பின்னர் நான்கு நாட்களாக சரிந்து கொண்டே வந்த நிலையில் இன்று திடீரென ஒரு கிராமுக்கு 50 ரூபாய், ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,465 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 51,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,920 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 89.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  89,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மத்திய பட்ஜெட்டுக்கு கண்டனம்.! தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்.!!