கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்..!
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை பாலத்தின் அருகில் நிறுத்திவிட்டு திடீரென பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அந்த இளைஞரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அதன் பின்னர் போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த சம்பவத்தில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மும்பையில் இதே போல் ஒருவர் மேம்பாலத்தில் தனது காரை நிறுத்திவிட்டு திடீரென காரில் இருந்து இறங்கி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று சென்னையில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran