1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (12:59 IST)

சென்னை மாநகர பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர்: டெண்டர் வெளியீடு..!

சென்னை மாநகர பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர்: டெண்டர் வெளியீடு..!
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை இயக்க ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்க டிரைவர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25 28ஆம் தேதி டெண்டருக்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் அன்றைய தினமே டெண்டர் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே நெல்லை போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை நியமனம் செய்ய டெண்டர் கோரப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் அதை கடுமையாக எதிர்த்தது. இந்த நிலையில் தற்போது சென்னை மாநகர பேருந்துகளுக்கும் அதே மாதிரியான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பை மீறி ஒப்பந்ததாரர்களிடமிருந்து போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் ஒப்பந்த படிவத்தை https://tntenders.gov.in/nicgep/app என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மேற்படி ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளில் மாற்றம் ஏதேனும் இருப்பின் அதன் விபரம் மேற்படி இணையதள முகவரியில் வெளியிடப்படும் என்றும் ஒப்பந்ததாரர்கள் மேற்படி இணையதள முகவரிக்கு வந்து அவ்வப்போது விவரங்களை பார்த்துக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.;=
சென்னை மாநகர பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர்: டெண்டர் வெளியீடு..!
 
Edited by Mahendran