1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

5 நாட்களுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

சென்னை
கடந்த ஐந்து நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை 6ஆம் தேதி தங்கம் விலை உயர்ந்த நிலையில் அதன் பிறகு இன்று தான் தங்கம் விலை உயர்ந்துள்ளது என்ற நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,785 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 54,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,255 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,040 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!