1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rain in four districts today says chennai meteorological

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் காலையில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாகவும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாகவும் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

நேற்று கூட இரவில் சென்னையின் பல இடங்களில் மழை பெய்தது என்பதும் இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே இன்று காலை பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

Edited by Siva
 
 
அடுத்த கட்டுரையில்
மீண்டும் 13 தமிழக மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?