1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty

2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பங்குச்சந்தை
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை சரிந்தது போல் இன்றும் பங்குச்சந்தை  இரண்டாவது நாளாக சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய போது சற்று ஏற்றத்தில் இருந்தாலும் அதன் பின்னர் தற்போது சரிய தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை தற்போது 229 புள்ளிகள் சார்ந்து 79 ஆயிரத்து 694 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தை லிப்ட் 56 புள்ளிகள் சார்ந்து 24, 268 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை கடந்த சில நாட்கள் ஆக சரிந்து வந்தாலும் அடுத்த வாரம் ஏற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் இருப்பதாகவும் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல் எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிவில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தமிழக மீனவர்கள் 13 பேர் கைதுக்கு அன்புமணி கண்டனம்.! நிரந்தர தீர்வு காண கோரிக்கை.!!!!