தொடர்புடைய செய்திகள்
- 6 மணி நேரம் விடாமல் பெய்த மழை! மூழ்கிய மும்பை! - பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!
- 177 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. மழை வந்ததால் ஏற்பட்ட திருப்பம்..!
- 8 வயது சிறுவனை கடித்த வெறிநாய்.. சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
- சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!
- இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?
இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நேற்று இரவு சென்னையில் நல்ல மழை பெய்த நிலையில் என்றும் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மீதமான மழை முதல் கன மழை வரையும் என்று சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, நாகப்பட்டினம், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாநிலங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை காரணமாக சாலைகளில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும் சில இடங்களில் டிராபிக் அதிகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும் என்றும் அறிவுள்ளது
மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva
