1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological says rain in 18 districts of tamil nadu

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

Rain
இன்று இரவு ஏழு மணி வரை சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காற்று மாறு திசை வேறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நேற்று கூட சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்தது என்பதும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ததாகவும் தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் இன்று மாலை முதல், இரவு 7 மணி வரை சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
இந்த அறிவிப்பின்படி இன்று மழை பெய்யும் 18 மாவட்டங்களையும் விவரங்கள் இதோ:
 
1. தேனி
2. நாகை
3. தஞ்சை
4. வேலூர்
5. கோவை
6. சென்னை
7. திருவாரூர்
8. சிவகங்கை
9. திண்டுக்கல்
10. திருவள்ளூர்
11. விழுப்புரம்
12. காஞ்சிபுரம்
13. ராமநாதபுரம்
14. புதுக்கோட்டை
15. மயிலாடுதுறை
16. செங்கல்பட்டு
17. ராணிப்பேட்டை
18. திருவண்ணாமலை
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!