திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஜூலை 2024 (08:43 IST)

ஒரு மணி நேரத்தில் ஒரு மாதத்திற்கான மழையில் 60%.. தமிழ்நாடு வெதர்மேன் புள்ளிவிவரம்..!

ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் 60% ஒரே மணி நேரத்தில் பெய்து விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் நேற்றைய சென்னை மழை குறித்து புள்ளி விவரத்தை கூறியுள்ளார்.

எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு வித்தியாசமாக மே மாதத்தில் மழை பெய்தது என்பதும் ஜூன் ஜூலையில் மழை பெய்து வருகிறது என்பது குறித்த குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் பகலில் வெயில் அடித்தாலும் மாலை மற்றும் இரவில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று சென்னையில் பெய்த மழை குறித்து சில புள்ளி விவரங்களை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தென்சென்னை, ஈசிஆர், ஓஎம்ஆர், சிறுசேரி, கூடுவாஞ்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளது என்றும் சென்னையில் பொதுவாக ஜூலை மாதம் பெய்யும் சராசரி மழையில் 60% நேற்று ஒரு மணி நேரத்தில் பெய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜூலை மாதத்தில் சென்னையில் அதிக அளவு மழை பெய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.  ஜூலை மாதம் சராசரியாக 100 மில்லி மீட்டர் மழை தான் பெய்யும் என்று ஆனால் நேற்று ஒரு மணி நேரத்தில் 60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது தான் தமிழ்நாடு வெதர்மேன் இதை கூறியுள்ளார்.

Edited by Siva