1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamil nadu meteorological center warning about rain

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Chennai Rain
இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் மாலை மற்றும் இரவில் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த 12 மாவட்டங்களின் பட்டியல் இதோ:
 
 
1. கடலூர்
2. சேலம்
3. வேலூர்
4. ராணிப்பேட்டை
5.  நாமக்கல்
6.  மதுரை
7.  விழுப்புரம்
8.  திருவள்ளூர்
9.  நீலகிரி
10.  கோவை
11.  திருப்பூர் 
12.பெரம்பலூர்
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?