சென்னையில் வானில் வட்டமடிக்கும் விமானங்கள்.. என்ன காரணம்?
சென்னையில் திடீரென வானில் விமானங்கள் வட்டமடைந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையின் பல இடங்களில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்த நிலையில் இன்று அதிகாலை வரை மழை பெய்து கொண்டிருந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
திடீர் கனமழை காரணமாகத்தான் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து கொண்டிருப்பதாகவும் நீண்ட நேரமாக வானில் வட்டம் அடைத்த அபுதாபி விமானம் தற்போது பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
விமான நிலையத்தில் பெய்த கனமழை காரணமாக ரன்வேயில் தண்ணீர் தேங்கி கொண்டிருப்பதை அடுத்து விமானங்கள் வட்டமடித்துக் கொண்டிருப்பதாகவும் சில விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் மழை சுரக்காற்று இடி மின்னலின் வேகம் குறைந்த பின்னர் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விமானங்கள் வந்து இறங்குவதிலும், விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பயணிகள் அவதியில் உள்ளனர்.
Edited by Siva