1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

சென்னை
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சிறிய அளவில் ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், இன்றும் சிறிய அளவில் தங்கம் விலை உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 41 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,666 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 328 உயர்ந்து ரூபாய் 53,328 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,136 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,088 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 94.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 94,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய JIO.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்! – புதிய கட்டண விவரம்!