1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2024 (11:31 IST)

முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு விட்டுக்கொடுங்கள்: சித்தராமையாவுக்கு கோரிக்கை விடுத்தவர் யார் தெரியுமா?

முதல்வர் பதவியை டிகே சிவகுமாருக்கு விட்டுக்கொடுத்து விடுங்கள் என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மடாதிபதி ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது என்பதும் சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் டிகே சிவகுமார் துணை முதல்வரானார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த மடாதிபதி ஒருவர் பேசிய போது சித்தராமையா  தனது முதல்வர் பதவியை டிகே சுமார் சிவக்குமாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் எல்லோரும் முதலமைச்சர் என்ற பதவியை, அதிகாரத்தை அனுபவித்து விட்டனர் என்றும் ஆனால் டி கே சிவகுமார் மட்டும் இன்னும் முதலமைச்சராக இல்லை என்றும் எனவே முதல்வர் பதவியை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் சித்தராமையா  இனிவரும் நாட்களில் டிகே சிவக்குமாருக்கு அந்த பதவியை விட்டுக் கொடுத்து அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் அவருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சித்தராமையா மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும் என்றும் இதை செய்யுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சித்தராமையா  காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி, ஒரு ஜனநாயக கட்சி, மேலிடம் கட்டளையிட்டால் நான் நீங்கள் சொன்னதை நான் செய்ய தயார் என்று கூறினார்

Edited by Siva