வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஜூன் 2024 (08:11 IST)

இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Chennai Rain
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை  வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு  என்றும், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்  என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் மழை  வாய்ப்பு என்றும், திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை  மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
 
மேலும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அதாவது ஜூன் 27ஆம் தேதி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
 
மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை இன்று மாலை அளவு அல்லது இரவு பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva