1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவா?

சென்னை
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு திடீரென 200 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 6,800 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 54,400 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,270 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,160 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 98.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 98,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றது முதல் தான் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது - முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி!