1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today gold and silver rate at Chennai

தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் தங்கம் விலையில் ஏற்றமா? இறக்கமா? சென்னை விலை நிலவரம்..!

gold
தேர்தல் முடிவுகள் நேற்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தங்கம் விலையில் எந்த அளவுக்கு ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 6,725 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 53,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,195 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 96.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
டெல்லியில் இன்று அடுத்தடுத்து நடக்கும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணிகளின் கூட்டம்: அவசர ஆலோசனை..!