ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (11:03 IST)

சென்னையின் 3 தொகுதிகளிலும் திமுக முன்னிலை.. வாக்கு விவரங்கள்..!

பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி 290 இடங்களிலும் இந்தியா கூட்டணி 230 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது

அதேபோல் தமிழகத்தை பொருத்தவரை திமுக 36 தொகுதிகளில் அதிமுக இரண்டு தொகுதிகளிலும் பாஜக ஒரே ஒரு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் திமுக ஆரம்ப முதல் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. முன்னிலை விவரங்கள் இதோ:

வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை தொகுதிகளில் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ள நிலையில் வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி 35,087 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

அதேபோல் மத்திய சென்னை தொகுதியில் 25,581 வாக்கு வித்தியாசத்தில் தயாநிதி மாறன் முன்னிலை முன்னிலை பெற்றுள்ளார் என்பதும், தென்சென்னையில் 27,177 வாக்குகள் பெற்று தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை முன்னிலை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva