1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today gold and silver rate at Chennai

3 நாள் ஏற்றத்திற்கு பின் மீண்டும் சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

தங்கம் விலை
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் சரிர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம். 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ரூபாய் 6,730 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 360 குறைந்து ரூபாய் 53,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,200 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,600 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தொடர் சரிவில் பங்குச்சந்தை.. தேர்தல் முடிவு இப்படித்தான் இருக்குமோ?