திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 மே 2024 (10:52 IST)

4 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Gold
கடந்த சில நாட்களாக தங்கம் விலை இறங்கி வருகிறது என்பதும் குறிப்பாக மே 20 ஆம் தேதி 55,200 என இருந்த தங்கம் விலை 4 நாள்களில் 2000 ரூபாய் அளவு குறைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்றும் 800 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ரூபாய் 6,650 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 800 குறைந்து ரூபாய் 53,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,120 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,960 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 96.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva