தொடர்புடைய செய்திகள்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
- தங்கம், வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!
- நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!
- ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
- புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!
திடீரென 800 ரூபாய்க்கு மேல் குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் திடீரென உயர்ந்து ஒரு சவரன் 55 ஆயிரம் என விற்பனையானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்துள்ளதை அடுத்து தங்க நகை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து ரூபாய் 6,750 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 880 குறைந்து ரூபாய் 54,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,220 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,760 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 97.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 97,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
