1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

2வது நாளாக தங்கம் விலை உயர்வு.. மீண்டும் ரூ.54,000ஐ நெருங்கிய சவரன்..!

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் தங்கம் விலை 54,000ஐ நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 6,740 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 53,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,210 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,680 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பிரதமர் தமிழகம் வரும் மறுநாள் டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?