1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

திடீரென ரூ.320 குறைந்த தங்கம் விலை.. மேலும் குறையுமா? இன்றைய சென்னை நிலவரம்..!

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் ஒரு சவரன் தங்கம் விலை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று ஒரு சவரனுக்கு 320 ரூபாய் திடீர் என தங்கம் விலை குறைந்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூபாய் 6,110 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 குறைந்து  ரூபாய் 48,880 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,580 எனவும் ஒரு சவரன் ரூபாய் 52,640 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 78.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. சுமார் 500 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!