வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சென்னை , செவ்வாய், 12 மார்ச் 2024 (08:24 IST)

மூவேந்தர் ஓட்டுநர்கள் நல சங்கம் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மூவேந்தர் ஓட்டுநர்கள் நல சங்க துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது
 
இவ்விழாவில் ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு தேவையான  அரிசி பருப்பு மற்றும்  வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் அவர்களது  குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது 
 
நல சங்கத்தின் தலைவர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்
 
இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட போதை ஒழிப்பு பிரிவு ஏடி.எஸ்.பி.    எஸ்.லட்சுமணன் சிறப்பு  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
 
அப்போது பேசிய அவர் கூறியதாவது:
 
இந்த மூவேந்தர் ஓட்டுநர் நல சங்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதற்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்
 
அது மட்டுமில்லை இந்த ஓட்டுனர்கள் மிகவும் பொறுமைசாலிகள் அவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள் தன்னுடன் பயணிப்பவர்கள் தேவையை அறிந்து நடந்து கொள்வார்கள்
 
இந்த சங்கத்துக்கு எனது முழு ஒத்துழைப்பு உண்டு
 
இந்த சங்கத்திற்கு நான் ஒன்று கேட்டுக்கொள்வது  சங்கத்தில் உள்ள உறுப்பினர்களாகிய ஓட்டுனர்கள் அனைவரும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்! போதையை முற்றிலும் ஒழிப்போம்! என்று அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் 
 
தமிழக அரசும் அதற்காகத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது நாமும் அதற்கு ஒத்துழைப்பு தந்து இந்த உறுதி மொழியை முன்னெடுத்து நாம் பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்