திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 மார்ச் 2024 (10:25 IST)

4 நாட்களாக ஒரே விலையில் தங்கம்.. வெள்ளி விலையில் மட்டும் சிறிய மாற்றம்..!

சமீபத்தில் தங்கம் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமின்றி ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது. 
 
தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.6150 என்றும் ஒரு சவரன் ரூ.49,200 என்றும் விற்பனையாகி வந்த நிலையில் இன்றும் சென்னையில் எந்தவிதமான விலை மாற்றமும் இன்றி அதே விலையிலே விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6620 என்றும் 8 கிராம் 52960 என்றும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கம் விலையிலும் எந்த விதமான மாற்றமும் இல்லை 
 
மார்ச் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஒரே விலையில் தங்கம் விலை ஏற்றயிறக்கம் இன்றி விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வெள்ளியின் விலையில் மட்டும் இன்று சற்று மாற்றம் கண்டுள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 79 ரூபாய் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 50 காசுகள் உயர்ந்து 79.50 என விற்பனை ஆகி வருகிறது அதே போல் ஒரு கிலோ வெள்ளி 79 ஆயிரத்து 500 ரூபாய் என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
 
 
 
Edited by Siva