1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் விலை திடீர் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி ஒரு விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5,810 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 46,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,280 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50,240 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 76.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பாஜகவுடன் அதிமுகவை இணைக்கும் முயற்சி தோல்வி..! இனி தலையிட விரும்பவில்லை - ஜி கே வாசன்..