ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (10:04 IST)

திடீரென பிரேக் போட்டதால் சென்னை மெட்ரோ ரயில் விபத்து: 4 பயணிகள் காயம்..!

metro
சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென டிரைவர் பிரேக் போட்டதால் அந்த ரயிலில் பயணம் செய்த நான்கு பயணிகள் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் குறைந்த கட்டணத்தில் டிராபிக் பிரச்சனை இன்றி வசதியாக பயணம் செய்யலாம் என்பதால் பெரும்பாலானோர் தற்போது மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 
 
இந்த நிலையில் நேற்று சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயிலை இயக்கி கொண்டிருந்த ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் மெட்ரோ ரயில் கண்ணாடி உடைந்ததாகவும் திடீரென பிரேக் போட்டதால் பயணிகள் தடுமாறி விழுந்ததாகவும் இதனால் நான்கு பயணிகள் காயமடைந்ததாகவும் அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
டிரைவர் எதற்காக திடீரென பிரேக் போட்டார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran