1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (07:21 IST)

சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு..!

Chennai electric train
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறங்களில் பராமரிப்பு பணிகளை ரயில்வே துறை கவனித்து வருகிறது என்பதும் இதனால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சென்னையில் இன்று காலை 11 மணிக்கு பராமரிப்பு பணிகள் தொடங்குவதாகவும் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் இந்த பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.

சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள், மறுவழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலும் பயணிகள் வசதிக்காக தாம்பரம்-  செங்கல்பட்டு வழித்தடத்தில்  காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் மறுவழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

Edited by Siva