1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

படிப்படியாக மீண்டும் உயரும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

சென்னை
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 10 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5740.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 அதிகரித்து ரூபாய் 45920.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் சவரன் ரூ.46 ஆயிரத்தை நெருங்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6210.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49680.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 79.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79200.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இன்றைய பங்குச்சந்தை நிலவரம் எப்படி? சென்செக்ஸ், நிப்டி விவரங்கள்..!