திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (13:52 IST)

கோயிலில் பெட்ரோல் குண்டு வீசி கைதான முரளிகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலம்

muralikirshnan
சென்னை கொத்தவால்வாசடியில், கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதான  முரளிகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  போலீஸிடம் கூறியுள்ளதாவது:

'மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில்,  தினமும் மதுவுக்கு அடிமையகி தினமும் குடித்து வந்ததாகவும், அடிக்கடி தனது காதில் நீ உயிருடன் இருக்காதே என்று ஒரு குரல்  கேட்டுக் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘வீட்டின் மேலே இருந்து குதித்து விடு தற்கொலை செய்துகொள் எப்படியாவதும் இறந்துவிடு’ என ஒரு குரல் தன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்ததாக கூறியுள்ள அவர், கடவுள் தன் வேண்டியதை நிறைவேற்றாததால் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தானும் தற்கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக’’ அவர் அதிர்ச்சி வாக்கு மூலம் அளித்துள்ளார்.