1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (10:11 IST)

சென்னையில் விடிய விடிய மழை: முக்கிய விமானங்கள் தாமதம்..!

Flight
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய முக்கிய விமானங்கள் தாமதமாக கிளம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் இருந்து  புறப்படும் விமானங்கள் தாமதமாக கிளம்பி வருகின்றன.
 
குறிப்பாக  திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் உள்பட 10 உள்நாட்டு விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டதாகவும், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, குவைத், பிராங்பார்ட், பக்ரைன், துபாய், சார்ஜா, தோகா, அடிஷ் அபாபா, அபுதாபி, மஸ்கட், லண்டன் செல்லும் 12 விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மேலும் இன்று அதிகாலை 5.45மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இன்ரு  காலை 9.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran