1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

4 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

சென்னை
சென்னையில் தங்கம் விலை கடந்த 4 நாட்களாக ஏற்ற இறக்கமின்றி இருந்த நிலைய்ல்  இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5665.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 45320.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6112.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48896.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 81.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
படிப்பு செலவு கிடையாது.. 100% வேலைவாய்ப்பு! – உடனே அப்ளை பண்ணுங்க!