1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (17:03 IST)

14 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

14 வயது சிறுமியின் கருவை கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
14 வயது சிறுமியின் 24 வார கால கருவை கலைக்க அனுமதி கோரி அச்சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
கர்ப்பத்தை மேலும் தொடர்ந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருக்கலைப்பு சட்டக்குழு அளித்த அறிக்கையை ஏற்று கரு கலைப்பு செய்ய அனுமதி என நீதிபதி தண்டபாணி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
 
உறவுக்கார இளைஞரின் பாலியல் தாக்குதலால் சிறுமி கர்ப்பமான நிலையில், செங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran