திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 19 ஏப்ரல் 2023 (08:00 IST)

சென்னை அண்ணாசாலையில் நள்ளிரவில் பைக்ரேஸ்.. விரட்டி பிடித்த காவல்துறையினர்..!

சென்னை அண்ணா சாலையில் நேற்று நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் விரட்டிப் பிடித்து பைக்குகளை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் அண்ணா சாலை மற்றும் பீச் சாலையில் அவ்வப்போது பைக் ரேஸ்சில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் பைக் ரேஸ்சில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என காவல்துறை எச்சரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை அண்ணா சாலையில் 1:30 மணி அளவில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு தகவல் வெளியானது. இதனை அடுத்து காவல்துறையினர் வாகன தணிக்கை செய்த போது கட்டுப்பாடுகளை மீறி அதிவேகமாக சென்ற இளைஞர்களின் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

அதி வேகமாக வாகனங்களை ஓட்டிய இளைஞர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Edited by Siva