தொடர்புடைய செய்திகள்
- நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- சென்னை-புதுச்சேரி கப்பல் சேவை இன்று முதல் தொடக்கம்.. தொழிலதிபர்கள் மகிழ்ச்சி..!
- அழகு நிலையத்தில் விபச்சாரம்; கஸ்டமராக சென்று பிடித்த போலீஸ்! – சென்னையில் பரபரப்பு!
- சென்னை-திருச்சி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் மாற்றம்..!
- தோனியை புகழ்ந்து பேசிய விராட் கோலி!
தொடர் சரிவில் தங்கம் வெள்ளி விலை: கிராம் ரூ.5000க்கு குறையுமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5201.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 41608.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5563.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44504.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் குறைந்து ரூபாய் 69.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 69000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
