திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (10:31 IST)

அழகு நிலையத்தில் விபச்சாரம்; கஸ்டமராக சென்று பிடித்த போலீஸ்! – சென்னையில் பரபரப்பு!

சென்னையில் சொகுசு விடுதி ஒன்றில் ப்யூட்டி பார்லர் பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அழகு நிலையங்கள் பல செயல்பட்டு வருகின்றன. ஆனால் சில இடங்களில் அழகு நிலையங்கள், மசாஜ் செண்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலையும் முறைகேடாக சிலர் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வபோது மசாஜ் செண்டர்களில் சோதனை மேற்கொள்ளும் போலீஸார் இவ்வாறான குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

அவ்வாறாக சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அழகு நிலையம் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களை கையும், களவுமாக பிடிக்க நினைத்த போலீஸார் திட்டம் தீட்டியுள்ளனர். அந்த அழகு நிலையத்தை நடத்துபவர்கள் பாலியல் வேலைகளுக்கு ஆன்லைனில் பணத்தை பெற்று அழகு நிலையத்தில் உள்ள பெண்களை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

அதையடுத்து கஸ்டமர் போல போலீஸ்காரர் ஒருவர் அங்கு சென்றுள்ளார். அவர் ஆன்லைனில் பணம் கட்டியதற்கான பில்லை காட்ட சொல்லியுள்ளனர். அதை வைத்து அந்த கும்பலை பிடித்த போலீஸார் அங்கிருந்து வடமாநில பெண்கள் உட்பட 5 பெண்களை மீட்டுள்ளனர், மேலும் இதுபோல சில பகுதிகளில் வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக செயல்பட்ட பாலியல் புரோக்கர்கள் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K