தொடர்புடைய செய்திகள்
- 25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு
- எதிர்கட்சிகள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
- ஃப்ரைட் ரைஸ் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து! – குழந்தையின் செயலால் நெகிழ்ந்த முதல்வர்!
- ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு.. ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!
- கட்சி கைக்கு வந்துட்டு.. தமிழகம் முழுக்க பொதுக்கூட்டம்! – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
வாக்குச்சாவடிக்கு அருகே வாக்கு சேகரிப்பு: திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்...!
வாக்குச்சாவடிக்கு அருகே வாக்கு சேகரிப்பு: திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்...!
ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வாக்கு சாவடி அருகே திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்ததால் இரு தரப்பினர் மத்தியில் கடும் வாக்குவாதம் எழுந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஈரோடு இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பெரியார் நகர் என்ற பகுதியில் வாக்கு சாவடிக்கை அருகே வாக்கு சேகரிப்பதில் ஈடுபட்டதால் திமுக மற்றும் அதிமுக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று இரு தரப்பினரை சமரசம் செய்து வைத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த வாக்குச்சாவடி அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு அந்த வாக்கு சாவடி திரும்பி உள்ளதாகவும் பொதுமக்கள் வாக்களித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
